சென்னை: தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மையில் எம்ஏ மற்றும் பிஜிடிஎல்ஏ, தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டப்படிப்பு, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் வார இறுதி பட்டயப்படிப்புகள் ஆகிய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
பிரத்யேக கல்வி தகுதி
இதற்கு விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் வேலைவாய்ப்புக்கான படிப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,’தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதியின்படி, மேற்கண்ட பிரிவுகளில் கல்வி கற்பது தொழிலாளர் நல அலுவலர் பதவிக்குப் பிரத்யேக கல்வி தகுதியாகும். இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராகப் பணிபுரிந்து வருகின்றனர்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பிஏ, எம்.ஏ தொழிலாளர் மேலாண்மை, பிஜிடிஎல்ஏ ஆகியப் படிப்புகள் முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
விருப்பமுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்களைப் பெற tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம், தங்கள் பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்பவேண்டும்.
- விண்ணப்பக்கட்டணம் ரூ. 200. பட்டியலின, பழங்குடி மாணவர்களுக்கு ரூ. 100. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆகஸ்ட்24ஆம் தேதிக்குள் தொழிலாளர் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
- இதற்கான வங்கி வரைவோலையினை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: விவரங்களுக்கு: www.tilschennai@tn.gov.in/ 044 - 29567885 / 29567886
இதையும் படிங்க: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து அரசு வேலைக்காக 67 லட்சம் பேர் காத்திருப்பு!