ETV Bharat / state

கனமழை எதிரொலி; பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை! - சென்னை செய்திகள்

TNEB:கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Electricity Board warned the public to be careful with electrical appliances during rainy season
பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 8:11 PM IST

சென்னை: கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டது. இதன்படி, தற்போது அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதால், பொதுமக்கள் கீழ்க்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

1. வீட்டில் மின் சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும்போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும்.

2. நீரில் நனைந்த ஃபேன், லைட் உள்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.

3. வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால், மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.

4. மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக்கூடாது.

5. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால், அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுத்து வரக்கூடாது.

6. மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ உடனடியாக மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற அலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதையும் படிங்க: எண்ணூர் அமோனியா கசிவு; பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.