சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2,900 கள உதவியாளர் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு, கடந்தாண்டு(2020) மார்ச் மாதம் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கான விண்ணப்பங்கள் நிகழாண்டு(2021) பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 16ஆம் தேதி வரை இணையதளம் வழியாகப் பெறப்பட்டன. இப்பதவிக்கான உடல் தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்ட்டது.
இதனிடையே, கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், தமிழ்நாடு அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவும், உடல் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது.
மேலும், உடல் தகுதித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் பிற விவரங்கள் ww.tangedco.gov.in என்ற இணையதளம் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.