சென்னை சேப்பாக்கத்தில் மாநில அரசைக் கண்டித்தும் தங்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டியும் பாரதிய ஜனதா அமைப்புசாரா தொழிற்சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் இணைந்து உண்ணாநிலை ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆர்பாட்டத்தில் இவர்கள் முன்வைத்த கோரிக்கையானது, 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அனுபவம்மிக்க ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண வேண்டும், தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
மேலும், ஊதிய ஒப்பந்தத்தில் உள்ளது போல் தினக்கூலி ரூ.3801 வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் கேங்மேன் பணியிடங்களைக் கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு விபத்து காப்பீடு வழங்க வேண்டும் .
உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் கே2 ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஒருநாள் அடையாள உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!