சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு பாஜக, அதிமுகவுடன் இணைந்து 20 இடங்களில் போட்டியிட்டது. அதில், கோவை தெற்கு தொகுதி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
முன்னதாக, தேர்தலில், வெற்றியை ஈட்டித்தரும் மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசளிக்கப்படும் என பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய ஒன்றிய இணையமைச்சருமான எல். முருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி, பாஜகவுக்கு வெற்றியை ஈட்டித் தந்த மாவட்ட தலைவர்களுக்கு கார் பரசளிக்கும் விழ நாளை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை நகர், ஈரோடு தெற்கு ஆகிய நான்கு மாவட்டத் தலைவர்களுக்கு புதிய கார்கள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன், தேசிய செயளற்குழு உறுப்பினர் இல. கணேசன், முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு - கடற்கரையில் பொது மக்கள் அனுமதி...