சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணைமேயர், நகராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவியிடங்களை பெருவாரியாக திமுக கைப்பற்றிது. இதைத்தொடர்ந்து மறைமுகத் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச்.4) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணைமேயர், நகராட்சித்தலைவர், நகராட்சி துணைத்தலைவர், பேரூராட்சித்தலைவர், பேரூராட்சி துணைத்தலைவர் ஆகிய பதவியிடங்களை நிரப்பிடச் சாதாரண மறைமுகத் தேர்தல்கள் நேற்று (மார்ச்.4) நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்களில் நடைபெற்றது.
20 மாநகராட்சிகளில் திமுக மேயர்
21 மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 மாநகராட்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் ஒரு மாநகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் (காங்கிரஸ் ) வெற்றி பெற்றுள்ளன.
15 மாநகராட்சிகளில் திமுக துணைமேயர்
21 மாநகராட்சி துணைமேயர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 15 மாநகராட்சிகளில் திமுக, 2 மாநகராட்சிகளில் காங்கிரஸ், தலா ஒரு மாநகராட்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), சி.பி.ஐ. , சி.பி.ஐ ( எம் ) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளன.
98 இடங்களில் திமுக நகராட்சி துணைத்தலைவர்
138 நகராட்சி துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 98 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் , 9 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் , 7 இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் , 4 இடங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தலா 2 இடங்களில் சி.பி.ஐ, சி.பி.ஐ ( எம் ) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் 3 இடங்களில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 11 பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை ( No Quorum ) உள்ளிட்ட காரணமாகத் தேர்தல் நடைபெறவில்லை.
395 இடங்களில் திமுக பேரூராட்சி தலைவர்
489 பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 395 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் , 20 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ், 18 இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 8 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி, 3 இடங்களில் சி.பி.ஐ (எம்), தலா 2 இடங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தலா 1 இடத்தில் சி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி மற்றும் 25 இடங்களில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 13 பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை ( No Quorum ) உள்ளிட்ட காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.
331 இடங்களில் திமுக பேரூராட்சி துணைத்தலைவர்
489 பேரூராட்சி துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 331 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம், 32 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ், 27 இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 11 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி, 5 இடங்களில் சி.பி.ஐ ( எம் ), தலா 3 இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலா 2 இடங்களில் சி.பி.ஐ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தலா 1 இடத்தில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மனித நேய மக்கள் கட்சி மற்றும் 34 இடங்களில் கயேட்சையும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 35 பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை ( No Quorum ) உள்ளிட்ட காரணமாக தேர்தல் நடைபெறவில்லை" என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.