ETV Bharat / state

நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது - சபாநாயகர் அப்பாவு

'தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவது தொடர்பான தமிழ்நாடு அரசின்  நீட் விலக்கு தேர்வு மசோதா மீண்டும் ஒருமனதாக ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் இன்றே ஆளுநருக்கு இந்த மசோதா அனுப்பப்பட உள்ளது' என்றும் பேரவை நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்னர், நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.

TN  speaker APPAVU Says NEET Exemption Bill was passed unanimously again in assembly

author img

By

Published : Feb 8, 2022, 7:14 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவது தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை சட்டப்பேரவை தலைவருக்கு (சபாநாயகர்) ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

இதனையடுத்து, இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் (பிப். 5) தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா

இதையடுத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்தார்கள்.

பின்னர், தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

ஏழை மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு தான் நீட் - ஸ்டாலின்

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்

சட்டப்பேரவைச் சிறப்புக்கூட்டம் கூடி இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பதற்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என இந்தச் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித்தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றத் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (பிப்.8) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக, பாமக, பாஜக, விசிக, காங்கிரஸ், உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரை
முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரை

நீட்டை வைத்து திமுக அரசியல் செய்கிறது

இந்தக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவினை மீண்டும் நிறைவேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை, ஒரு மனதாக நிறைவேற்றச் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து பேசத் தொடங்கிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நீட்டை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்று பாஜக வெளிநடப்பு செய்வதாகச் சொல்லி வெளிநடப்பு செய்தார்.

ஏழை மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு தான் நீட்

அதன் பின், நீட் தேர்வு விலக்குத் தொடர்பான சட்டமுன்வடிவினை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், மீண்டும் நீட் தேர்வு விலக்குத் தொடர்பான சட்டமுன்வடிவினை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்து உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரை

ஏழை மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு தான் நீட் தேர்வு. அரசியல் சட்டம், பாகுபாடு கூடாது என்கிறது. ஆனால், நீட் தேர்வு பாகுபாட்டை உருவாக்கி பணக்கார நீதியை பேசுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்றே ஆளுநருக்கு இந்த மசோதா அனுப்பப்பட உள்ளது

மேலும் அவர், ' சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?” என சட்டப்பேரவையில் கேள்விகேட்டார்.

பின்னர் பேரவையில் ஒருமனதாக நீட் விலக்கு தேர்வு மசோதா மீண்டும் ஏற்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் இன்றே ஆளுநருக்கு இந்த மசோதா அனுப்பப்பட உள்ளது என்றும் பேரவை நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்னர் நீட் விலக்கு மசோதா, ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: மாணவர்களை கல்லறைக்கு கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.