ETV Bharat / state

10, 12ஆம் வகுப்புகள் ஜன. 19 திறப்பு! - cm K Palaniswami announcement of schools reopens

சென்னை: தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

schools reopen
பள்ளிகள் திறப்பு அறிவிப்பு
author img

By

Published : Jan 12, 2021, 11:26 AM IST

Updated : Jan 12, 2021, 12:10 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனாவை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்துவருகிறது.

அரசு மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. பள்ளிகள் திறப்பது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

கருத்துக் கேட்பு கூட்டம்

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 2021 ஜனவரி 6 முதல் 8ஆம் தேதி வரை கருத்து கேட்கப்பட்டது.

இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் அனுமதியை அளித்துள்ளதாக 95 விழுக்காடு பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளன. கல்வி பயில்வதில் மாணவர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டு வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிகள் திறப்பு நெறிமுறிகள்

பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வேண்டும். அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'கேரள அரசின் முன்னுதாரணத்தை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும்' - ஸ்டாலின் வலியுறுத்தல்

Last Updated : Jan 12, 2021, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.