சென்னை: மத்திய அரசின் சமக்ரா சிக்ஸா என்ற கல்வித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி முறையை மேம்படுத்தும் வண்ணம், கரும்பலகைகளுக்குப் பதிலாக இன்டர்நெட் இணைப்பு வசதி கொண்ட ஸ்மார்ட் போர்டு அமைத்து, ஸ்மார்ட் கிளாஸ்களாக மாற்றும் செயல்பாடு 2023-2024ஆம் கல்வி ஆண்டில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் 2023-2024 என்ற அடுத்த ஆண்டு முதல் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஸ்மார்ட் கிளாஸ்களாக மாற்றும் திட்டத்திற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் ஆர்த்தி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தங்களது மாவட்டங்களில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் இணையதள வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இணையதள வசதி செய்த பின்னர், அந்தந்த பள்ளிகளுக்கான ஸ்மார்ட் கிளாஸ் ரூம் மற்றும் கம்ப்யூட்டர் லேப் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், ஒரு மாதத்திற்கு 1,500 ரூபாய் செலவில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் இன்டர்நெட் வசதி ஏற்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி.. மத்திய அமைச்சர் கூறியது என்ன?