ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 2,435 பேருக்கு கரோனா! - TN corona case

தமிழ்நாட்டில் மேலும் 2435 பேருக்கு கரோனா!

author img

By

Published : Nov 3, 2020, 7:16 PM IST

Updated : Nov 3, 2020, 8:07 PM IST

19:09 November 03

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 435 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து இன்று (நவ. 03) மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 69 ஆயிரத்து 496 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மேலும் இரண்டாயிரத்து 435 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டதைக் கண்டறிய முடிந்தது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 917 ஆர்டிபிசிஆர் பரிசோதனை 98 லட்சத்து 98 ஆயிரத்து 509 நபர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் ஏழு லட்சத்து 31 ஆயிரத்து 942 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 19 ஆயிரத்து 201 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் குணமடைந்த இரண்டாயிரத்து 207 பேர் இன்று (நவ. 03) வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்து ஆயிரத்து 527 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 16 பேரும் அரசு மருத்துமனையில் 15 பேரும் என 31 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 214 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அதிகபட்சமாக சென்னையில் 669 பேருக்கும், கோயம்புத்தூரில் 238 பேருக்கும், செங்கல்பட்டில் 136 பேருக்கும், திருவள்ளூரில் 113 பேருக்கும் புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 

பிற மாவட்டங்களில் புதிதாக நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவந்தாலும் பொதுமக்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க...உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடியா!

Last Updated : Nov 3, 2020, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.