ETV Bharat / state

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு! - பாலிடெக்னிக் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

polytechnic
polytechnic
author img

By

Published : May 31, 2021, 9:11 PM IST

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவுரைப்படி பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று (31-5-2021) வெளியானது.

இந்தத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 2020, ஜனவரி 2021, பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டது. மொத்தம் 2,28,441 மாணவர்களில் 2,09,338 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.63 விழுக்காடு ஆகும். 18,529 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும், 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜுன், ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வெழுதலாம். இதற்கான தேர்வு கட்டணத்தை ஜுன் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை செலுத்தலாம்.

நடப்பு பருவங்களான இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவ மாணாக்கர்களுக்கான (அரியர் தேர்வு உட்பட) தேர்வுகள் ஜுன் 14ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும். மாணவர்கள் இதற்கான தேர்வு கட்டணத்தை ஜுன் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.