ETV Bharat / state

நீட் தேர்வு தேதி அறிவிப்பு - தமிழ்நாடு மாணவர்களின் நிலை என்ன?

திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Neet Exam
நீட் தேர்வு
author img

By

Published : Jul 14, 2021, 6:50 AM IST

சென்னை: இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், சித்தா, யுனானி, ஆயூஷ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு உண்டா?இல்லையா? என்ற குழப்பம் நிலவி வந்தது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வுக்கு மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்திருந்தார்.

குழு அறிக்கையால் நீட் தேர்வில் மாற்றம் வருமா?

மருத்துவப்படிப்பில் நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு , பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த அறிக்கையும் நாளை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

neet
நீட் தேர்வு

இந்நிலையில் நீட் தேர்விற்கு இன்று முதல் மாணவர்கள் https://neet.nta.nic.in/webinfo/Page/Page?PageId=6&LangId=P என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் மும்முரமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

நீட் தேர்வில் அரங்கேறிய முறைகேடுகள்

மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கடந்த 2017-18 ம் கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. வசதிப்படைத்த மாணவர்கள் நீட் தேர்விற்குத் தனியார் பயிற்சி மையங்களில் படித்து தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டப்பின்னர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் இருப்பிட சான்றிதழ் பெற்று மருத்துவக்கல்லூரியில் 2017-18, 2018-19 ம் கல்வியாண்டில் சேர்ந்தது கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் நீட் தேர்வின் மூலம் மருத்துவக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்வதற்காக மாணவர்கள் முறைகேட்டிலும் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது.

neet
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்

அதிமுக ஆட்சியில் தீர்மானம்

நீட் தேர்வினை ரத்துச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினார்.

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வினை எழுதுவதற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியது போல், தமிழ்நாட்டில் நீட் தேர்வு உண்டா?இல்லையா?என்பது குறித்து அரசு தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதே திமுகவின் கொள்கை

இதற்குப் பதிலளித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுகவின் கொள்கையாக இருக்கிறது.

இதனை ரத்துச் செய்வதற்காகத்தான் உயர் நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விற்கு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நீட் தேர்விற்கான பயிற்சிகள் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

மருத்துவப்படிப்பில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம் இன்று(ஜூலை.14) சமர்பிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படியில் அரசு நடவடிக்கை எடுத்தாலும், 2021-22 ஆம் கல்வியாண்டில் நீட் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தேசிய மருத்துவ ஆணையம் நீட் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதியளித்துள்ளது. அதனை மீறி 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க முடியாது.

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, "உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பில் நீட் தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பது தான் கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தனியார் பயிற்சி மையங்களில் சென்று கட்டணம் செலுத்தி மாணவர்கள் பயிற்சி பெற முடியவில்லை என கூறுகின்றனர். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நீட்டை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் உண்மையில் வருந்தத்தக்கதே!' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.