சென்னை: விடுதலை போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் 104ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா. சுப்ரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், " விடுதலை போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் தியாகத்தை போன்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தினோம்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் இச்சிலை நிறுவப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் கலைஞர் " என்றார்.
மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 1 முதல் 8ஆம் வகுப்புகள் திறப்பு: அறிக்கையை சமர்பித்தார் அன்பில் மகேஷ்!