சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கரோனா தொற்று இன்று (ஜூலை 15) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் நாசர் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ், பல துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி...