ETV Bharat / state

அமைச்சர் அண்ணன் மகனிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் - injured

சென்னை: சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அண்ணன் மகனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் நலம் விசாரித்தார்.

நிலம் விசாரித்த முதலமைச்சர்
author img

By

Published : Jun 11, 2019, 11:59 PM IST

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணன் ஆழ்வார்பேட்டையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சி.வி. ராதாகிருஷ்ணனின் மகன் அர்ஜுன் (20) காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.

இவருக்கு அவரது தந்தை ரூ.24 லட்சம் மதிப்புடைய பைக் வாங்கி கொடுக்கப்பட்டதாகவும், இதனை டெஸ்ட் டிரைவ் செய்ய வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒட்டிச் சென்றபோது நிலை தடுமாறி கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதைப்பார்த்த சக வாகன ஒட்டிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் அண்ணன் மகனிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அர்ஜூனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி
விபத்தில் சிக்கிய தமிழக சட்டத்துறை அமைச்சர் அண்ணன் மகனை நேரில் நலம் விசாரித்தார் முதல்வர்.

        தமிழக சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் சி.வி.சண்முகம் . இவரது அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணன் ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது மகன் அர்ஜுன் (20) காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். இவருக்கு ரூ.24 லட்சம் மதிப்புடைய மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கப்பட்டதாகவும் இதனை டெஸ்ட் டிரைவ் செய்ய வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விடுமுறை நாட்களில் காலை நேரங்களில் வேகமாக  ஓட்டி வந்துள்ளார்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கம் மேம்பாலம் அருகே அந்த மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் அவரது வலது கால் அதிக சேதம் ஏற்பட்டதால் அகற்றப்பட்டது. 

இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அர்ஜுனை பார்த்து நலம் விசாரிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவமனைக்கு வந்தார். சிகிச்சை பெற்று வரும் அர்ஜுனை நேரில் பார்த்து முதலமைச்சர் நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் விபரம் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். முதலமைச்சர் வருகையையொட்டி மருத்தவமனை வளாகம் முழுவம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உடன் அமைச்சர்கள் இருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.