கரோனா குறித்த புதிய விவரங்களை தெரிவிப்பதற்காக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், "தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த எட்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எட்டு பேரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த எட்டு பேரில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட எட்டு பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 43 ஆயிரத்து 538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ள நிலையில், மேலும் 40 ஆயிரம் படுக்கை வசதிகள் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 93 ஆயிரம் பேர்களின் விவரங்களை விமான நிலையத்திலிருந்து பெற்றுள்ளோம்.
இந்தப் பட்டியலைக் கொண்டு மாவட்ட வாரியாக சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று சோதனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனாவால் பாதிக்கப்பட்ட எட்டு பேரில், பத்து மாத ஆண் குழந்தை ஒன்று கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
#CoronaUpdate: #TN reports 8 new positive cases from Erode (contact of the Thai Nationals who are undergoing treatment at IRT Perundurai).The Pts were identified thru #TNHEALTH’s contact tracing. All patients are isolated for treatment. @MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#CoronaUpdate: #TN reports 8 new positive cases from Erode (contact of the Thai Nationals who are undergoing treatment at IRT Perundurai).The Pts were identified thru #TNHEALTH’s contact tracing. All patients are isolated for treatment. @MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 29, 2020#CoronaUpdate: #TN reports 8 new positive cases from Erode (contact of the Thai Nationals who are undergoing treatment at IRT Perundurai).The Pts were identified thru #TNHEALTH’s contact tracing. All patients are isolated for treatment. @MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 29, 2020
மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் குணமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘கரோனா பரவலை தடுக்க தனித்திருங்கள்’ -அமைச்சர் விஜயபாஸ்கர்!