சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் "நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்" என்ற திட்டத்தை நேற்று(டிச.19) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கு நிதியுதவி தாருங்கள் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். இத்திட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் நிதி உதவி வழங்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிதியுதவி அளித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், தான் படித்த சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் மேம்பாட்டிற்காக ஒரு லட்சம் ரூபாயை மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
இதையும் படிங்க:வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கட்டடங்களை திறந்து வைத்த ஸ்டாலின்