நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்:
- 2019 -20 ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை அளவு 35 ஆயிரத்து 950 கோடியாக இருந்தது.
- 2020 - 21 ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை 61,320 கோடி ஏற்பட்டுள்ளது.
- பத்தாண்டுகளில் கடன் பெற்று அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- கடன் பத்திரம் மூலம் திரட்டிய நிதியை வைத்து ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
- அரசின் மொத்த பொதுக்கடன் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை 5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடி.
- கடந்த 10 ஆண்டுகளில் அரசின் வருவாய் வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4 விழுக்காடு இருந்து. 2020 - 21 ஆம் ஆண்டில் வெறும் 5.46 விழுக்காடு இருந்தது.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் வளர்ச்சி சரிந்து 3 விழுக்காடு என்ற மதிப்பில் உள்ளது.
- தமிழ்நாட்டின் வர்த்தக வாகன வரி வருவாய் கர்நாடகா, கேரளா மாநில விட குறைவு.
- சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீதான வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- 2020 - 21 ஆம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்ட அதிக வரிகள் மூலம் 3 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. ஆனால் வெறும் 837 கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
- கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்களில் 5.4 விழுக்காடு குறைந்துள்ளது.
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடக்காத காரணத்தினால் அரசின் மானியங்களை முழுமையாக பெற முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் செயல் திறன் மிகவும் பாதிப்படைந்து.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் மின் வாரியத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.2 லட்சம் கோடி.
- சென்னை மாநகர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மொத்த கடன் ரூபாய் 5 ஆயிரத்து 282 கோடியாக உள்ளது.
- முறையற்ற நிர்வாகத்தினாலும் மோசமான நிதி மேலாண்மையினாலும், போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கம் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் தினசரி இழப்பு ரூ.15 கோடி.
- மின் வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக மின்சாரத்தை அதிக விலையில் வாங்குவதும் சொந்த உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்காலும் ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தில் தினசரி இயக்க இழப்பு ரூ.55 கோடி.
- தமிழ்நாடு பெற்றுள்ள கடனுக்கான தினசரி செலுத்தும் வட்டி தொகை ரூ.115 கோடி.
- பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தினசரி செலுத்தும் வட்டி தொகை ரூ.180 கோடி.
- ஒவ்வொரு குடிமகனும் ஓராண்டு செலுத்தும் வட்டி தொகை ரூ.7,700 உள்ளது.
- ஒவ்வொரு குடிமகன் மீதும் மொத்த கடன், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வெளியில் தெரியாத கடன் உள்பட 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் உள்ளது.
- தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் தலையில் பொது சந்தா கடன் மட்டும் ரூ.2,63,976 ஆக இருக்கிறது.
இதையும் படிங்க: தமிழர் மீது ரூ.2.63 லட்சம் கடன்