தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்க பல்வேறு நோய் தடுப்பு பணிகளையும் நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும்.
இதில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள் பின்வருமாறு:
1.ஸ்டெர்லைட் காப்பர்- வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடி - 5 கோடி ரூபாய்
2.சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம் - 3 கோடி ரூபாய்
3.ஐ.டி.சி. எஜூகேஷன் - 2 கோடி ரூபாய்
4.தி சன்மார் குரூப் - 1 கோடி ரூபாய்
5.ஆச்சி மசாலா புட்ஸ் நிறுவனம் - 1 கோடியே 10 லட்சம் ரூபாய்
6.தமிழ்நாடு அரசு E-Payments - 97 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்
7.தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் - 77 லட்சத்து 30 ஆயிரத்து 543 ரூபாய்
8.தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை - 64 லட்சத்து 74 ஆயிரத்து 752 ரூபாய்
9.கிரிஸ்டி பிரைட்கிராம் நிறுவனம் - 50 லட்சம் ரூபாய்
10.தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் - மதுரை 31 லட்சம் ரூபாய்.
11.தி சுப்ரீம் இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் நிறுவனம் - 31 லட்சம் ரூபாய்
12.தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் - 26 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்
13.மனோஜ்குமார் சொந்தாலியா, ஸ்ரீவல்லபாச்சார்யா வித்யா சபா - 25 லட்சம் ரூபாய்
14.I.C.F. ஆவடி - 22 லட்சத்து 43 ஆயிரத்து 772 ரூபாய்
15.ஜெய வர்மா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் - 15 லட்சம் ரூபாய்
16.நியூ லைப் அசெம்பிளி ஆப் காட் - 10 லட்சம் ரூபாய்
17.ராஜரத்தினம் - 10 லட்சம் ரூபாய்
மேற்கண்ட நிறுவனங்களிடமிருந்து 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் வரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளது. இதுவரை நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது பிரச்னை செய்தால் குண்டர் சட்டம் - காவல் ஆணையர் எச்சரிக்கை