ETV Bharat / state

நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டம் - தமிழ்நாடு அரசு

நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட்
நீட்
author img

By

Published : Sep 2, 2021, 4:45 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 2) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சிறு, நடுத்தர தொழில்கள் ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், "தமிழ்நாடு அரசு மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது.

மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களைக் கருத்தில்கொண்டு முதலமைச்சர் கடந்த ஜூன் 5ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் கல்வியாளர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைத்து உத்தரவிட்டார்.

நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டம்

அந்தக் குழுவானது கடந்த ஜூலை 17ஆம் தேதி அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வுசெய்து அதனைச் செயல்படுத்தும்பொருட்டு தலைமைச் செயலர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

மேற்காணும் குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினைப் புரிந்துகொள்வதற்குப் புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்வி செயற்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால், ஒதுக்கப்படும்-பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்திற்கான சமூகநீதி பாதுகாப்பை இந்தப் புதிய சட்டம் உறுதிசெய்யும். தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற ஒன்றிய அரசுக்கு கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வலியுறுத்தல்

தற்போது ஒன்றிய அரசு அனைத்து இந்திய தொகுப்பு இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்த நிதியாண்டு முதல் இளநிலை, முதுநிலை பல் மருத்துவர் சேர்க்கைக்குப் பின்பற்ற முடிவுசெய்துள்ளது.

மாநில அரசால் பின்பற்றப்பட்டுவரும் இடஒதுக்கீட்டு முறையை அகில இந்திய தொகுப்பிற்கு மாநில அரசால் அளிக்கப்படும் இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும் என்பதைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புக - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.