சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக (Maintenance Allowance) மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக 75 சதவிகிதத்திற்கு மேல் கடும் உடல் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர், முதுகு தண்டுவடம், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, தசைச்சிதைவு ஆகிய நோய்கள் மற்றும் தொழுநோயால் பாதிப்படைந்தோர் என 2,11,391 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பித்து காத்திருப்போர் 24,951 நபர்களுக்கும் தற்போது உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனை தகுதியுள்ள பயனாளிகள் பெறும் வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் பயன்பெறும் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், முகவரி, குறைபாட்டின் தன்மை மற்றும் சதவிகிதம், தேசிய அடையாள அட்டை எண், தங்களின் வங்கி கணக்கு எண், தொலைபேசி எண் ஆகியவற்றை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் அலுவலகத்தில் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-
பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ்பயன் பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரம் சமர்ப்பிக்க வேண்டுகோள்.#CMMKSTALIN l #TNDIPR l @CMOTamilnadu @mkstalin@mp_saminathan
— TN DIPR (@TNDIPRNEWS) January 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
1/2 pic.twitter.com/vS7wKPJWll
">பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ்பயன் பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரம் சமர்ப்பிக்க வேண்டுகோள்.#CMMKSTALIN l #TNDIPR l @CMOTamilnadu @mkstalin@mp_saminathan
— TN DIPR (@TNDIPRNEWS) January 23, 2023
1/2 pic.twitter.com/vS7wKPJWllபராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ்பயன் பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரம் சமர்ப்பிக்க வேண்டுகோள்.#CMMKSTALIN l #TNDIPR l @CMOTamilnadu @mkstalin@mp_saminathan
— TN DIPR (@TNDIPRNEWS) January 23, 2023
1/2 pic.twitter.com/vS7wKPJWll
இந்த விவரங்கள், பராமரிப்பு உதவித்தொகையை விரைவில் வழங்க ஏதுவாக இருக்கும். எனவே, பொதுமக்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 33 பேர் கைது