சென்னை: மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலத்திற்குள்ளே ரயில் போக்குவரத்தை அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவும், மாநிலத்திற்குள் ரயில் சேவை இயங்கவும், பயணிகள் ரயில்களை இயக்கவும் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.