ETV Bharat / state

‘பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அரசின் புதிய வழிகாட்டுதல்கள்’ - பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அரசின் புதிய வழிகாட்டுதல்கள்

சென்னை: ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காகப் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

CM
CM
author img

By

Published : May 14, 2020, 10:52 PM IST

அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கு பயணிப்பவர்கள்:

நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படும்.

மற்றவர்கள் 14 நாட்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள்:

பிற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும்.

கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்.

கரோனா நோய் தொற்று இல்லாதவர்கள் ஏழு நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.

முக்கியமாக நோய்த்தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் இருந்து வருபவர்கள் (மும்பை , குஜராத், மகாராஷ்டிரா) 7 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அறிகுறி இல்லாத பட்சத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர், அவர் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள், தொடர்ந்து அரசு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்படுவர்.

பிற நாடுகளில் இருந்து வருபவர்கள்:

பிற நாடுகளில் இருந்து வருபவர்கள் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

நோய்த்தொற்று உறுதியானால், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

கரோனா நோய்த் தொற்று இல்லையென்றால், அரசு கண்காணிப்பில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.

7 நாட்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக பரிசோதனை செய்யப்படும், இதிலும் நோய்த் தொற்று இல்லையென்றால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர். வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விதிவிலக்கு:

தீரா நோய் பாதிப்பால் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுபவர்கள், இரத்த சொந்தங்களின் இறுதி சடங்கில் பங்கேற்க இருப்பவர்கள்.

கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு உதவி தேவைப்படும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்,
இரத்த சொந்தத்தின் இறப்பு சடங்கில் பங்கேற்க இருப்பவர்கள் மட்டும் விமான நிலைய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மற்ற மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் நோய்த் தொற்று பரிசோதனை முடிவு வரும் வரை அரசு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்படுவர்.

பரிசோதனை முடிவில் நோய்த் தொற்று இல்லையென்றால் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அல்லது அந்த மாவட்ட மருத்துவ அதிகாரிகளின் அனுமதியின் பேரில் வீட்டிற்குச் சென்று தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.

தனிநபர் குழுவாக தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் மக்கள் தவறாமல் தங்கள் வாகனத்திற்கு தமிழக அரசின் பயண அனுமதி சீட்டு பெற வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.