கரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 62 லட்ச ரூபாயும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 21 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள ஆணையில், "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் கரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 62 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 21 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... கால்நடை கொட்டகை அமைக்க ரூ. 431 கோடி நிதி ஒதுக்கீடு!