ETV Bharat / state

திரையரங்குகள் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட உத்தரவு - சென்னை மாவட்ட செய்திகள்

TN Govt cancels order
TN Govt cancels order
author img

By

Published : Jan 8, 2021, 6:24 PM IST

Updated : Jan 8, 2021, 7:33 PM IST

18:21 January 08

சென்னை: திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்ட தமிழ்நாடு அரசு, 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்துவருகிறது. 

அரசு, இந்த நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.  

அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்துவருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கடந்த 4ஆம் தேதியன்று, தமிழ்நாடு திரையரங்குகளின் உரிமையாளர்கள் சங்கத்தினர், கரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவரும் நிலையில், ரயில், பேருந்து, விமான போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், திரைப்பட படப்பிடிப்பு ஆகியவற்றுக்குப் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில், திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்கருதி, திரையரங்குகள் 100 விழுக்காடு இருக்கை பயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்தனர்.  

கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி

கரோனா தொற்று படிப்படியாக குறைந்துவருவதைக் கருத்தில்கொண்டும், திரைப்படம் மற்றும் திரையரங்க தொழிலாளர்களின் நலன் கருதியும், மத்திய அரசு 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதித்திருந்த போதிலும், சங்கத்தின் கோரிக்கையினைப் பரிசீலனை செய்து, 100 விழுக்காடு இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மத்திய அரசின் அறிவுரையைக் கருத்தில்கொண்டும், இது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் கருத்தில்கொண்டும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும்வரை 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.  

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது. கரோனா நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்துவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 8, 2021, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.