ETV Bharat / state

1570 கோடி ரூபாய் வருமானம் எப்படி கிடைக்கும்? துணை வேந்தருக்கு தமிழ்நாடு அரசு கடிதம்! - TN govt asks explanation from anna university vc surappa

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டால் கூடுதலாகத் தேவைப்படும் 1,570 கோடி ரூபாய் நிதி எவ்வாறு கிடைக்கும் என்பது குறித்து விளக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

1570 கோடி வருமானம் எப்படி கிடைக்கும்? துணைவேந்தருக்கு தமிழக அரசு கடிதம்!

author img

By

Published : Oct 14, 2020, 4:05 PM IST

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, மத்திய அரசிற்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து கிடைத்தால் அதிக அளவில் நிதி வருவாய் கிடைக்கும். மேலும், இந்த நிதியின் மூலம் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், ஆய்வு மேற்கொள்ளுதல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு போன்றவற்றால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என தெரிவித்திருந்தார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தால் ஐந்து வருடத்திற்கு தேவையான ஆயிரத்து 570 கோடி ரூபாய் நிதியை திரட்ட முடியும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 314 கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அவர் கூறும்போது மாணவர்களின் தேர்வு கட்டணம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கான அங்கீகார கட்டணம் போன்றவற்றின் மூலமும் திரட்ட முடியும் என கூறியிருந்தார். மாணவர்களின் தேர்வு கட்டணம், கல்வி கட்டணம் போன்றவற்றை உயர்த்துவதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு, அண்ணா பல்கலைக்கழகம் 5 ஆண்டில் ஆயிரத்து 570 கோடி ரூபாய் நிதியினை எவ்வாறு திரட்ட முடியும் என்பதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து உயர்க்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகனிடம் கேட்டதற்கு, தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் 69 சதவீத இடஒதுக்கீடு, மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் எழுத்துப்பூர்வமான பதில் மத்திய அரசிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு கிடைத்தால் மட்டுமே சிறப்பு அந்தஸ்து குறித்து முடிவெடுக்க முடியும். தற்போதைய நிலையிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க....முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, குடியரசுத் தலைவர் ஆறுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.