கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு லட்சத்து 73ஆயிரத்து 460 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும்; நான்காயிரத்து 461 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த ஆணையில், 'கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த மாநகராட்சி, உள்ளாட்சி ஊழியர்கள் குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும். மேலும் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 28 பேரின் குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும்' எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க....பாஸ்போர்ட் பரிசீலனை விவரங்களை ஸ்கைப்பில் அழைக்கலாம்!