ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசின் நெறிமுறைகள்! - மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணம்

சென்னை: இக்கட்டான இந்தக் கரோனா சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

seceratriat
seceratriat
author img

By

Published : Jun 22, 2020, 4:07 PM IST

கரோனா ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணத்தினை அவர்களது வீட்டுக்கே சென்று சேர்ப்பிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:

  • மாவட்ட ஆட்சியர் இவ்வறிவிப்பினைச் செயல்படுத்தும் முதன்மை அலுவலர் ஆவார்.
  • மாவட்ட ஆட்சியர் தன்னுடைய மாவட்டத்தில் இவ்வறிவிப்பினைச் செயல்படுத்தும் துறையினைத் தேர்வு செய்வார்.
  • இவ்வறிவிப்பினைச் செயல்படுத்தும் குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், இவ்வறிவிப்பினைச் செயல்படுத்தும் துறையின் மாவட்ட அளவிலான அலுவலர் இடம் பெறுவார்கள்.
  • முதலமைச்சரின் அறிவிப்பிற்கேற்ப இந்நிவாரணத் தொகையினை மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்குச் சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார்.
  • நிவாரணத் தொகை வழங்கும்போது, உரிய கரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு முறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகள், நிவாரணத் தொகை வழங்க உள்ள அலுவலரிடம் விநியோகப் படிவத்தில் உள்ள விவரங்களை அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தங்கள் தேசிய அடையாள அட்டையின் அசலினை காண்பித்து அதன் நகலினை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பித்து நிவாரணத் தொகை ரூ .1000 / - பெற்றுக்கொள்ளலாம்.
  • நிவாரணத் தொகை வழங்கவுள்ள அலுவலர், இவ்விவரத்தினை தேசிய அடையாள அட்டையுடன்கூடிய பதிவு புத்தகத்தில் உதவி வழங்கும் பக்கத்தில் முத்திரையிட்டு பதிவுசெய்திட வேண்டும். "Covid - 19 நிவாரணத் தொகை ரூ .1000 / வழங்கப்பட்டது” என முத்திரையிட்டு, கையொப்பமிட வேண்டும். நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர் இரண்டு ரூ.500 / - நோட்டுகளாகவே பயனாளிக்கு வழங்க வேண்டும்.
  • இவ்வுதவித் தொகையினை மாற்றுத் திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது சிறப்பு சூழ்நிலையில் பாதுகாவலர்களிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
  • வேறு மாவட்டங்களை அல்லது நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர் பகுதிக்கு உட்படாத பிறபகுதிகளைச் சார்ந்த மாற்றுத் திறானளிகளின் விவரம், தேசிய அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழைப் பெற்று அவ்விவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும். இவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு ரொக்க நிவாரணத் தொகை விநியோகப் படிவம், ஒப்புகைச் சீட்டு மாதிரிகள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவை மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று அச்சிடப்பட வேண்டும். ஒவ்வொரு புத்தகத்திலும் 50 படிவங்கள் இருக்க வேண்டும். நிவாரணத்தொகை வழங்கவுள்ள துறையின் மாவட்ட அளவிலான அலுவலர் இப்புத்தகங்களை விநியோகிக்கும் அலுவலர்களுக்கு வழங்கிய விவரங்களைப் பராமரிக்க வேண்டும்.
  • மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நிவாரணத் தொகை வழங்கும் துறையின் மாவட்ட அளவிலான அலுவலருடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
  • மாவட்ட மாற்றுத்திறானாளிகள் நல அலுவலர் மாவட்ட ஆட்சியர் மூலம் இத்திட்ட செயலாக்கம் குறித்த விளம்பரங்களைச் செய்ய வேண்டும். இவ்விளம்பரத்தில் இந்நிவராணத் தொகை வழங்கப்படவுள்ள நாள்கள், மாற்றுத் திறனாளிகள் விநியோகப் படிவம், பூர்த்திசெய்ய அளிக்க வேண்டி விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மேலும் இத்தொகை கிடைப்பதில் சிரமம் ஏதேனும் இருப்பின் தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர், தொலைபேசி எண்களை தெரிவிக்க வேண்டும். இவ்வுதவி மறுக்கப்படும் நிலையில் அல்லது உதவி மைய எண் கிடைக்கப்பெறவில்லை எனில் மாநில அளவிலான 18004250111-ஐ தொடர்புகொள்ளலாம்.
  • அரசு மறுவாழ்வு இல்லங்கள், பிற இல்லங்களில் தங்கியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை சென்று அடைவதை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
  • நிவாரணத் தொகை முழுவதுமாக வழங்கப்பட்டபின் ஒப்புகைச் சீட்டுகள் அடங்கிய புத்தகங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் நிவாரணத் தொகை வழங்கும் துறையின் மாவட்ட அலுவலர் தொகுத்து ஒப்படைக்க வேண்டும்.
  • பயன்படுத்தாத ஒப்புகைச்சீட்டுகளின் எண்ணிக்கை வ.எண்: முதல் வரை நிவாரணத் தொகை வழங்கும் துறையின் மாவட்ட அலுவலர் தொகுத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் முன்னேற்ற அறிக்கையினை கீழ்க்காணும் படிவத்தில் பூர்த்திசெய்து மாநில Help Line Applicationஇல் பதிவுசெய்ய வேண்டும். தேவைப்படும் விவரம்: ரூ.1000 / - நிவாரணத் தொகை தேதி மாவட்டத்தின் பெயர் தாலுகாவின் பெயர் பயனாளிகளின் எண்ணிக்கை வழங்கப்பட்ட தொகை விவரம்.
  • நிவாரணத் தொகை வழங்கும் துறையின் மாவட்ட அலுவலர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுலவர் தலா ஐந்து விழுக்காடு நிவாரணத் தொகை வழங்கும் பகுதியினை Random-ஆக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்விவரத்தினை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியருக்கும் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கும் அனுப்ப வேண்டும்.
  • நிவாரணத் தொகை வழங்குவதில் ஏதேனும் முறைகேடு தெரியவந்தால் மாவட்ட ஆட்சியர் உரிய பணியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அரசாணையில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலாக கூடுதல் நிதி தேவைப்படின் தேவையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்குத் தெரிவிக்கலாம். மிகுதியாக இருக்கும் மாவட்டங்களிலிருந்து நிதி மறு ஒதுக்கீடு வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கிய நிதி முடியும் தருவாயில் இவ்விவரத்தினை மாநில ஆணையருக்குத் தெரிவிக்கலாம்.
  • இத்தொகையினை தனி வங்கி கணக்கில் மாவட்ட ஆட்சியர் பராமரிக்க வேண்டும்.
  • மாவட்ட ஆட்சியர் இத்திட்ட செயலாக்கம் குறித்து நாள்தோறும் கண்காணிக்க வேண்டும்.
  • அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒதுக்கியுள்ள தொகையினை காலதாமதமின்றி கருவூலத்தில் பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட கணக்கிற்கு வரவு வைக்க வேண்டும். இதற்கான அரசாணை, முதன்மைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையரின் செயல்முறை கடித நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட துறையுடன் இணைந்து செயல்பட்டு காலதாமதத்தினைத் தவிர்க்க வேண்டும்.
  • தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்க திட்ட செயல்பாட்டிற்காக இதுவரை UDID-க்காக விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் அவர்களின் புகைப்படம், தேசிய அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழ்களின் நகல் புகைப்படத்துடன்கூடிய அரசு அங்கீகரித்த அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகல், வசிப்பிடத்திற்கான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலினை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் வழங்குமாறு கோரவும். இருப்பினும் இது நிவாரணத் தொகை பெறுவதற்கு கட்டாயமில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.