ETV Bharat / state

வண்டலூர் உயிரியல் பூங்கா போறீங்களா!... அப்போ இத படிங்க முதல்ல..! - chennai news

Zoo entry Fee hike: தமிழ்நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Zoo entry hike
தமிழகத்தில் உள்ள உயிரியல் பூங்கா கட்டணம் உயர்வு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 11:20 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா மற்றும் வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகிய பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காகவும் இந்த உயிரியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அரசாணையில், "திருத்திய நுழைவுக் கட்டண அமைப்பில் உள்ள சிறப்பம்சங்கள் பின்வருமாறு;

  • 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தற்போது உள்ள இலவச நுழைவுக் கட்டணம் தொடர்கிறது.
  • 5 - 12 மற்றும் 13 - 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 2 அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு, அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.20/- மட்டும் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதைத் தொடர்ந்து, இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் ஏற்கெனவே உள்ள இருவேறு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
  • தற்போது உள்ள சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரூ,25 ரத்து செய்யப்படுகிறது. சைக்கிள் மற்றும் ரிக்சாவுக்கு நிறுத்துமிடக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன், டெம்போ பயணிகள், மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுளது.
  • பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவுக் கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனக் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சஃபாரி வாகனக் கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ ஒலிப்பதிவு (Video camera) கட்டணம் ரூ.500-லிருந்து ரூ.750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, சென்னை கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் மற்றும் வேலூர் அமர்த்த பூங்காவில் இந்த கட்டண அமைப்பு மாற்றியமைக்கப்படுவதால், பூங்காவிற்கு வருவாய் அதிகரிக்கும். இதனால் விலங்குகளையும், பூங்காவை மேம்படுத்த உதவும்" என்று தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Praggnanandhaa: அடுத்த விஸ்வநாதன் ஆனந்த் நானா? - செஸ் நாயகன் பிரக்ஞானந்தாவின் பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.