ETV Bharat / state

பாலமுருகனடிமை சுவாமிக்கு 2024 திருவள்ளுவர் விருது - தமிழக அரசு அறிவிப்பு..! - பாவேந்தர் பாரதிதாசன் விருது

Thiruvalluvar Award: 2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பாலமுருகனடிமை சுவாமி வழங்கிடவும் 2023ம் ஆண்டுக்கான அண்ணா விருது, காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது,பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெறும் விருது பெருப்பவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் விருது 2024; பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கிட தமிழக அரசு அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 10:52 PM IST

சென்னை: தமிழக அரசு 2023ம் ஆண்டுக்கான அண்ணா விருது, காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது,பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெறும் விருது பெருப்பவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  • 2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி அவர்களுக்கும் 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை திரு.பரமசிவம் அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது திரு. உ. பலராமன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதி அவர்களுக்கும்
    1/2 pic.twitter.com/BGA1Z3bJ9R

    — TN DIPR (@TNDIPRNEWS) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புக்களையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறது.

அவ்வகையில், பள்ளி மாணவர்களுக்கு 1983ஆம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவச் செல்வங்களுக்கு விழா எடுத்து ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கியும் உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இரு முறை நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வரும் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்படவுள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் முதன்மைத் தொண்டர் என பாராட்டப்பட்ட வரும் 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான பத்துமடை பரமசிவத்திற்கு 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதி வழங்கப்படவுள்ளது.

தேசியத் தமிழக் கவிஞர் பேராயம், சிலப்புச் செல்வர் ம.பொ.சி கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான உ.பலராமனக்கு 2023ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படவுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்குக் கவிதைகளைப் படைத்த கவிஞர் பழனி பாரதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருது வழங்கப்படவுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞரால் முத்தரசனாரின் "கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்" என்று பாராட்டைப் பெற்றவரும் தமது 92ஆவது அகவையிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ்ப்பணியாற்றி வரும் எழுச்சிக் கவிஞர் ம. முத்தரசுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதினை வழங்குகிறது.

பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களைத் திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன்க்கு 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்த் தென்றல் திரு. வி. க. விருதினை வழங்குகிறது.

தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் இரா. கருணாநிதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை வழங்குகிறது. விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இவ்விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கவுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பி.சண்முகத்திற்கு 'அம்பேத்கர் விருது', சுப.வீரபாண்டியனுக்கு 'பெரியார் விருது' - தமிழக அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.