சென்னை: கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அத்தியாவசியத் தேவைகள் தடையின்றி பொது மக்களுக்கு கிடைக்கும் வகையில், ஜூன் 7 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு நீட்டிப்பு வரும் 14ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஜூன் 21ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இத்தளர்வில் முக்கியமாக டாஸ்மாக் கடைகள் திறப்பு இடம்பெற்றுள்ளது. டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், வரும் 15ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது.
அனுமதியில்லாத மாவட்டங்கள்
கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதியில்லை. பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் லாக்டவுன் ஜூன் 21 வரை நீட்டிப்பு