தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகமாக இருந்த நிலையில், கரோனா சிறப்பு வார்டுகளில் உள்ள படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்த மாநில அரசு உத்தரவிட்டது.
அதன்படி கரோனா சிறப்பு வார்டுகளில் உள்ள படுக்கைகள் அனைத்திலும் ஆக்ஸிஜன் பைப் லைன்கள், ஆக்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிக்காக தற்போது 135 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 65 கோடி ரூபாயும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 70 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.