தமிழ்நாட்டில் கரோனா முதல் அலையைக் காட்டிலும், இரண்டாம் அலையின்போது கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரமாகவும், உயிரிழப்போர் எண்ணிக்கை 500 ஆகவும் இருந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தங்களது உயிரைப் பணயம்வைத்து மக்களைக் காப்பாற்றுவதற்காகப் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரத் துறை ஊழியர்கள் எனப் பலர் உயிரிழக்க நேர்ந்தது.
இதனைக் கருத்தில்கொண்டு, கரோனாவால் உயிரிழந்த மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, தற்போது கரோனாவால் உயிரிழந்த மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் 34 பேரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர 1,43,080 மாணவர்கள் பதிவு