ETV Bharat / state

’நாட்டில் நல்லிணக்கம், வளம், நல்ல உடல் நலம் பெருகட்டும்’ -ஆளுநர் ஆயுத பூஜை வாழ்த்து - முக்கிய செய்திகள்

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்த ஆளுநர்
ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்த ஆளுநர்
author img

By

Published : Oct 13, 2021, 6:53 PM IST

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”ஆயுதபூஜை, விஜயதசமி நன்னாள்களில் தமிழ்நாடு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆயுதபூஜை பண்டிகை, தீய சக்தியை அழித்து நல்ல சக்தியின் வெற்றியைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரிக் கொண்டாட்டங்களில் மனித இனத்தை பேணிப் பாதுகாக்கும் துர்கை அன்னையைப் போற்றிப் பாடுகின்றோம். பத்தாம் நாளில் பகவான் ஸ்ரீராமர் மற்றும் துர்கை அன்னையின் வெற்றியை விஜயதசமியாக நாடு முழுவதும் பல்வேறு முறைகளில் கொண்டாடுகிறோம்.

உண்மை, நன்மை, நேர்மை ஆகிய நற்பண்புகளை நாம் நிலைநிறுத்தவும், நம் குடும்பங்களில் என்றும் காணாத வளத்தையும் வளர்ச்சியையும் காணவும் விஜயதசமி நன்னாளின் வருகை, நம் வாழ்வில் புதிய ஆற்றலின் தொடக்கத்தை அறிவிக்கட்டும். இத்திருவிழா நம் மாநிலத்திலும் நாட்டிலும் அமைதி, நல்லிணக்கம், வளம், நல்ல உடல் நலம் ஆகியவற்றை நல்கட்டும். ஜெய் ஹிந்த்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு விலக்கு: ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.