ETV Bharat / state

ஆளுநர் டெல்லி செல்ல இது தான் காரணமா? செந்தில் பாலாஜி குறித்த ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தும் ஆளுநர் - இன்று டெல்லி செல்லும் ஆளுநர் ஆர் என் ரவி

தனது குடும்பம் மற்றும் பாதுகாவலர்களுடன் இன்று டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திடீர் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர்
திடீர் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர்
author img

By

Published : Jul 7, 2023, 3:51 PM IST

சென்னை: பணி நிமித்தமாக இன்று விமானத்தின் மார்க்கமாக தனது குடும்பம் மற்றும் பாதுகாவலர்களுடன் டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. . டெல்லி பயணத்தின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறபட்டுச் செல்கிறார். டெல்லி புறபட்டுச் செல்லும் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆளுநர் குடும்பத்தினர் ஆகியோரும் புறப்பட்டு செல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளன. பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி செல்லும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, டெல்லியில் சுமார் ஐந்து நாட்கள் தங்க உள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர். என். ரவி அமைச்சரவையில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டார். பின்னர் அது குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அந்த அறிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதையும் படிங்க: காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைக்க தமிழக அரசு என்ன செய்தது - டிஐஜி தற்கொலை குறித்து அண்ணாமலை!

மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு தான் அமைச்சரை நீக்கவும், சேர்க்கவும் முடியும். இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; அவர் தலையிடக்கூடாது என்றும், அமைச்சரவையில் செந்தில் பாலாஜியை தங்கள் அனுமதியின்றி நீக்கியது குறித்து சட்டரீதியாக சந்திப்போம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, துணைவேந்தர்கள் ரீதியான விவகாரங்களிலும், ஆளுநர் ரவி மீது தமிழ்நாடு அரசு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை டெல்லிக்குச் செல்ல ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் அவையில் இருந்து நீக்குவதற்காக அட்டர்னி ஜெனரல் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர் டெல்லியில் இருந்து ஜூலை 13ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு திரும்ப உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவும் காலதாமதம் செய்வதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? - செந்தில் பாலாஜி வழக்கில் ட்விஸ்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.