ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தலைவர் பரிந்துரை கோப்புகளை மீண்டும் நிராகரித்த ஆளுநர்.. முறைகேடு புகாருக்கு ஆளான நபருக்கு உறுப்பினர் பதவியா? எனக் கேள்வி! - sivakumar vs tnpsc secretary to TN Govt

TN Governor has returned the nomination file of TNPSC Chairman: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கான வயது வரம்பு 62 என உள்ள போது 61 வயதான சைலேந்திரபாபுவை நியமனம் செய்ய முடியாது என அரசின் கோப்பை 2வது முறையாக மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆளுநர் ஆர் என் ரவி
ஆளுநர் ஆர் என் ரவி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 1:43 PM IST

Updated : Oct 26, 2023, 11:01 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கான வயது வரம்பு 62 என உள்ள போது 61 வயதான சைலேந்திரபாபுவை நியமனம் செய்ய முடியாது எனவும், உறுப்பினர் சிவக்குமார் என்பவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டிற்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிலுவையில் உள்ள நிலையில், அவர் போன்றவர்களை நியமனம் செய்தால் எப்படி நேர்மையாக நியமனம் நடைபெறும் எனக் கேள்வி எழுப்பி அரசின் கோப்பை 2வது முறையாக மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியில் 62 வயது வரையில் மட்டுமே இருக்க முடியும். ஆனால், சைலேந்திரபாபுவிற்கு தற்பொழுது 61 வயதாகிறது. எனவே, அவருக்கு அந்த பதவியை வழங்க முடியாது. மேலும், தலைவர் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிவக்குமார் மீது குற்றச்சாட்டிற்காக ஏற்கனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேல்முறையீடும் நிலுவையில் உள்ளது. இவர் போன்றவர்களை நியமனம் செய்தால் எவ்வாறு நேர்மையாக நடைபெறும் எனக் கூறி கோப்பிற்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக பணிபுரிந்த சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய அரசு ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. எனவே, இதற்காக தலைவர் பதவியில் யாரையும் நியமிக்காமல் மனிதவள மேம்பாட்டுத் துறையும் இருந்து வந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் பதவியிலிருந்து சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற பின்னர், அவரை தலைவராகவும், அவருடன் சேர்த்து 10 உறுப்பினர்களை நியமிக்கவும் தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு அரசு பரிந்துரை கடிதத்தை அனுப்பியது.

இந்நிலையில் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமலிருந்து வந்தார். டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அமைப்பில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர் பதவிகள் உள்ளன. ஆனால், தற்போது அதில் 4 உறுப்பினர் பதவிகள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளது. அதில், ஒருவரான முனியநாதன், தலைவர் பொறுப்பைக் கூடுதலாக வகித்து வருகிறார். பல மாதங்களாகத் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்து வரும் நிலையில், டி.ஜி.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டார். மேலும், 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்கும் பெயர்களைத் தமிழக அரசு ஆளுநருக்குக் கோப்பு மூலம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் ஆகஸ்ட் 22ஆம் தேதி சைலேந்திரபாபு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டு மீண்டும் தமிழக அரசுக்குக் கோப்பை திருப்பி அனுப்பி இருந்தார். மேலும், அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, எதன் அடிப்படையில் இவர்களைத் தகுதி வாய்ந்தவர்கள் எனத் தேர்வு செய்தீர்கள் எனக் கேள்வியும் எழுப்பி உள்ளார்.

மேலும், வெளிப்படைத் தன்மையுடன் பணியாளர் தேர்வாணையத்திற்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான விளம்பரம் செய்யப்பட்டதா? எனவும், இவர்களைத் தேர்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் யார்? யார்? உறுப்பினர்களாக இருந்தார்கள் எனவும், அவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் இவர்களைத் தேர்வு செய்தனர் என்பது குறித்து விளக்கமான கோப்புகளை அளிக்குமாறும் அதில் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி சைலேந்திரபாபுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கான காரணங்கள், பின்பற்றப்பட்ட சட்ட விதிமுறைகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள், தேர்வாணையத்தின் சட்ட விதிகள் உள்ளிட்ட விவரங்கள் ஆவணங்களாகத் தயார் செய்யப்பட்டு ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் எழுப்பிய கேள்விகளும், அதற்கான விளக்கங்களும் அதில் இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் வெளியானது.

இந்தநிலையில், 2வது முறையாகவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நியமனம் செய்வதற்கான கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். மேலும், அந்தக் கோப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியில் 62 வயது வரையில் மட்டுமே இருக்க முடியும். ஆனால், சைலேந்திரபாபுவிற்கு தற்பொழுது 61 வயதாகிறது. எனவே, அவருக்கு வழங்க முடியாது. மேலும் தலைவர் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவில்லை.

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! - காரணம் என்ன?

Last Updated : Oct 26, 2023, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.