ETV Bharat / state

2021-2022 கலைக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்க அனுமதி! - அரசு கலை

2021-22 - ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

TN
TN
author img

By

Published : Sep 7, 2021, 9:33 PM IST

சென்னை : 2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் கலை பாடப்பிரிவுகளுக்கு 25 சதவீதம் கூடுதலாகவும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 25 சதவீதம் கூடுதலாகவும் மாணவ மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள ஆணையில், “தமிழ்நாடு சட்டப் பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் 17.08.2021 அன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு 25 சதவிகிதமாக வழங்கப்படும்.

கூடுதல் விண்ணப்பங்கள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அருகாமையிலுள்ள, சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களிலிருந்தும் நகராட்சியிலிருந்தும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவ- மாணவிகள் அரசு கல்லூரிகளில் அதிகளவில் கல்வி பயில விண்ணப்பித்துள்ளனர்.

இம்மாணவ, மாணவிகள் அதிக கல்விக் கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கல்வி பயில மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், அரசு கல்லூரிகளில் 2021-2022 - ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அனுமதி அளித்து அரசாணை

இதனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவ மாணவியர்களின் நலன் கருதி 2021-22 ஆம் கல்வியாண்டில் கூடுதலாக தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கலை பாடப்பிரிவுகளுக்கு 25 சதவீதம் கூடுதலாகவும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 25 சதவீதம் கூடுதலாகவும் மாணவ- மாணவியர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

TN Government to allow 2021-2022 additional students to art colleges!
2021-2022 கலைக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்க அனுமதி!
கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை பரிசீலித்த அரசு , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டிற்கு கலை பாடப்பிரிவுகளுக்கு 25 சதவீதம் கூடுதலாகவும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 25 சதவீதம் கூடுதலாகவும் மாணவ மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது.
மேலும், இக்கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் அரசு ஆணையிடுகிறது.
இதையும் படிங்க :
மேயர் பணியை மக்கள் பணியாக மாற்றினேன்- மு.க. ஸ்டாலின்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.