சென்னை: கரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த குழு கரோனா தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க உள்ளது.
அந்தக் குழுக்களின் விவரம்,
* தலைவர்- மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
* செயலர் - எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர்.
* உறுப்பினர்கள்- தேசிய சுகாதார சிறப்பு திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் உள்பட 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Exclusive: சென்னையில் குழந்தைகள் வலியின்றி சிகிச்சைப் பெற கார்ட்டூன் வார்டு