ETV Bharat / state

பாதுகாக்கப்பட்ட சின்னங்களின் பராமரிப்பு பணிகளுக்கான நிதியை உயர்த்தி அரசாணை வெளியீடு - protected monuments

94 பாதுகாக்கபட்ட சின்னங்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2021ஆம் நிதியாண்டு முதல் செலவினங்களை இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

TN Government raising funds for maintenance of protected monuments

author img

By

Published : Feb 12, 2021, 5:02 PM IST

சென்னை: தொல்லியல் துறையில் 94 பாதுகாக்கப்பட்ட சின்னங்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2021ஆம் நிதியாண்டு முதல் செலவினங்கள் இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், "தொல்லியல் துறையில் 94 புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேற்படி, பாதுகாக்கப்பட்ட சின்னங்களில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ .1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட சின்னங்களின் தேவைக்கேற்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது. எனவே, தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களை தொல்லியல் நெறிமுறைகளின்படி சிறப்பான முறையில் பாதுகாப்பதற்கும் , அதன் வரலாற்றுச் சிறப்பினை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கும், வரவு - செலவு திட்டத்தில் தொடரும் செலவினமாக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ .1 கோடியினை 2020-2021ஆம் நிதி ஆண்டு முதல் ரூ . 2 கோடி ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

tn order
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.