கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகிய மூன்று இடங்களில் தலா 50 மாணவியர்கள் வீதம் தங்கிப் பயில ஏதுவாக மூன்று ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ. 1 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரம் 604 செலவில் கட்ட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆணையில், 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வெளியிட்டிருந்தார்.
அதில், “விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மூன்று புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ.2 கோடி செலவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகிய மூன்று இடங்களில் தலா 50 மாணவியர்கள் வீதம் தங்கி பயில ஏதுவாக மூன்று ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ.1,06,34,604 செலவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் உதவித்தொகை இரு மடங்காக உயர்வு!