ETV Bharat / state

அரசு பேருந்துகளில் 5 வயது வரை கட்டணமில்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு! - குழந்தைகளுக்கு பேருந்து கட்டணம்

ஐந்து வயது வரையிலான குழந்தைகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம், மேலும் ஐந்து வயது முதல் 12 வயது வரை அரை டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 24, 2023, 4:27 PM IST

Updated : May 25, 2023, 1:12 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என அண்மையில் நடந்த சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்திருந்தார்.

தற்போது தமிழ்நாட்டில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது, அவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள அரசிதழில் இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசுப் பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், மாவட்ட, விரைவு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி, தற்போது ஐந்து வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அரசு பேருந்துகளில் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "ஓசி டிக்கெட்ன்னா போயிட்டு போயிட்டு வருவீயா?" மூதாட்டியை திட்டிய கண்டக்டர் சஸ்பெண்ட்!

ஏற்கெனவே அரசு நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற போதிலும், சில நேரங்களில் போக்குவரத்து ஊழியர்கள், நடந்து கொள்ளும் விதத்தால் விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேரிட்டது. ஐந்து வயது வரையிலான குழந்தைகள் எனும் போது, வயதை நிரூபிப்பதற்கான ஆவணம் தேவையா என்பது போன்ற விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதுவரையிலும் உத்தேசமாக குழந்தைகள் உயரத்தைப் பார்த்தே டிக்கெட் கணக்கிடும் முறை இயல்பில் நடைமுறையில் உள்ளது.

எனவே இலவச டிக்கெட் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கிளாம்பாக்கம் - சென்னை இடையே எவ்வளவு பேருந்துகள் இயக்க திட்டம்? - எம்டிசிக்கு போக்குவரத்து துறை கெடு விதிப்பு!

Last Updated : May 25, 2023, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.