ETV Bharat / state

மதிய உணவுக்குப் பதிலாக உலர் உணவுப் பொருள் வழங்க அரசாணை வெளியீடு - Chennai news

சென்னை: சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு, மதிய உணவுக்குப் பதிலாக உலர் உணவுப் பொருள் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை
அரசாணை
author img

By

Published : Jul 3, 2020, 7:00 PM IST

சத்துணவு மற்றும் சமூக நலத்துறை திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு, மதிய உணவுக்குப் பதிலாக உலர் உணவுப் பொருள் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, மே மாதத்திற்கான சத்துணவை அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களை மாணவர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

நடுநிலைப்பள்ளியில் 23 லட்சத்து 71 ஆயிரத்து 316 மாணவர்கள், உயர் நிலை பள்ளியில் 18 லட்சத்து 89 ஆயிரத்து 808 மாணவர்கள் என மொத்தம் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவர்களுக்கு மே மாதத்திற்கான சத்துணவை உலர் உணவாக வழங்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தற்போது கரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பதிலும், ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் விநியோகம் செய்ய வேண்டுமென்று இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக 16 ஆயிரத்து 138.69 மெட்ரிக் டன் அரிசி, 5 ஆயிரத்து 207.84 மெட்ரிக் பருப்பு கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் உளர் உணவுப் பொருள்கள் வழங்குவதை மாவட்ட ஆட்சியர் விளம்பரப்படுத்தி மாணவர்கள் பெற்று செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.