சென்னை: அனைத்து சாதியினரும் அரச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்க திருவண்ணாமலை, பழநி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் ஒரு பயிற்சி பள்ளி என செயல்பட்டு வருகிறது.
-
சென்னை - @tnhrcedept ஆணையர் அலுவலகத்தில் இன்று (12.09.2023) திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினோம். (1/2) pic.twitter.com/zS3NHtbxlW
— P.K. Sekar Babu (@PKSekarbabu) September 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சென்னை - @tnhrcedept ஆணையர் அலுவலகத்தில் இன்று (12.09.2023) திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினோம். (1/2) pic.twitter.com/zS3NHtbxlW
— P.K. Sekar Babu (@PKSekarbabu) September 12, 2023சென்னை - @tnhrcedept ஆணையர் அலுவலகத்தில் இன்று (12.09.2023) திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினோம். (1/2) pic.twitter.com/zS3NHtbxlW
— P.K. Sekar Babu (@PKSekarbabu) September 12, 2023
இந்த பயிற்சி மையத்தில் சேருபவர்களுக்கு ஓராண்டு பயிற்சியில் ஆகமங்கள், கோயில்களில் பூஜைகள் எப்படி செய்யப்பட வேண்டும், மந்திரங்களை எப்படி ஓத வேண்டும் என்ற பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே பயின்று வந்த நிலையில், தற்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரம்யா, கிருஷ்ணவேனி மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதா ஆகிய மூவரும் அர்ச்சகர்களாக பயிற்சி பெற்று அதில் தேர்ச்சியும் அடைந்துள்ளனர்.
மேலும், அதற்கான சான்றிதழை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு வழங்கினார். இதனையடுத்து, இவர்கள் மூவரும் ஸ்ரீ ரங்கநாதர் கோயிலின் கீழ் இயங்கக் கூடிய அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்சியை முடித்து மிக விரைவில் தமிழ்நாட்டில் உள்ள வைஷ்ணவ கோயில்களில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அதற்கு முன்பாக இதுவரை பயிற்சி பள்ளியில் பயின்ற இவர்கள், அடுத்த ஓராண்டு கோயில்களில் நேரடியாக உதவி அர்ச்சகர்களாக பயிற்சி வழங்கபட உள்ளது. மேலும், இவர்கள் மூன்று பேரும் மாநிலத்தின் பட்டர்களாக பயிற்சி பெற்ற முதல் மூன்று பெண்கள் ஆவார்கள்.
இந்த நிலையில், கணித முதுகலை பட்டதாரியான ரம்யா தொலைபேசி வாயிலாக ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகையில், “ஆண்களுக்கு பெண்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை. திருமந்திரங்கள் சொல்வதில் ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு கிடையாது. கடவுளுக்கு திருமந்திரங்கள் சொல்வது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எங்களுக்கு பயிற்சி வழங்கிய குருமார்களும், எங்களுடன் பயிற்சியில் இருந்த நண்பர்களும் சரி, பெண்கள் அர்ச்சகர்களாக கோயிலுக்குள் செல்லும்போது பல எதிர்ப்புகள் வரும். அதையெல்லாம் நீங்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என எங்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினர்.
பெண்களும் அர்ச்சகர்கள்தான் என பொதுமக்களும் எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம், இந்த துறையில் பெண்கள் இல்லை என்பதுதான் எனக்கான முதல் புள்ளி.
ஒரு கோயில் என்று எடுத்துக்கொண்டால் ஆண் தெய்வம்,பெண் தெய்வம் என இருக்கும். தெய்வங்களில் பேதம் பார்க்காத நாம், அர்ச்சகர்களிலும் ஆண் - பெண் என்ற பேதம் பார்க்கக் கூடாது. மக்கள் எங்களுக்கு நம்பிக்கை வழங்க வேண்டும். நான் கடலூர் மாவட்டம் என்பதால், அருகில் இருக்கும் கோயில்களிலோ அல்லது ஸ்ரீரங்கம் கோயிலிலோ பயிற்சிக்கு அமர்த்த வேண்டும் என கேட்டுள்ளேன்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இளநிலை பட்டதாரியான கிருஷ்ணவேணி அளித்த சிறப்பு பேட்டியில், “கடவுளுக்கு கைகாரியம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த துறையை தேர்ந்தெடுத்து உள்ளேன். பெண்களாலும் இந்து துறையில் செயலாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்தவே இந்த துறைக்கு வந்து உள்ளேன்.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள் மதன கோபால பெருமாள் கோயிலில் பணிபுரிய கேட்டுள்ளேன். குறிப்பாக, மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மிகவும் நலிவடைந்த குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்துள்ள எனக்கு இது மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்துள்ளது.
மக்களுடைய ஒத்துழைப்பு எங்களை போன்றோர்களுக்கு இருந்தால், எங்களைப் போன்றே பெண்கள் அரச்சகர் பயிற்சிக்கு வருவார்கள். வரும் காலங்களில் பெண் அர்ச்சகர்களே இல்லாத கோயில் கிடையாது என்ற நிலைக்கு தமிழ்நாடு மாறும்” என கூறினார்.
மேலும், இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, " 2023 – 2024ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்கள் பணி அனுபவம் பெற்று தங்களை செம்மைப்படுத்தி கொள்ளும் வகையில், இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓராண்டிற்கு அனுபவ பயிற்சி பெற மாத ஊக்கத்தொகையாக 8,000 ரூபாய் பயிற்சி பெறும் கோயில்களில் இருந்து வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருக்கோயில்களில் பணிபுரியும் மூத்த அர்ச்சகர்களின் கீழ் அனுபவ பயிற்சி பெறுவதற்கு 2007 – 2008ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி நிறைவு செய்த 71 மாணவர்களும், 2022 – 2023ஆம் ஆண்டு பயிற்சி நிறைவு செய்த பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்த 94 மாணவர்களுக்கும், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 4 மாணவர்களுக்கும் என மொத்தம் 98 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை அண்மையில்தான் துறையின் அமைச்சர் வழங்கினார். மேலும், அரசாணையில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி செயல்பட சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்” என தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபுக்கு தோலுரித்த வாழைப்பழத்தை அனுப்ப முயற்சி .. பாஜக பிரமுகர் தடுத்து நிறுத்திய போலீசார்!