தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஓரிரு நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் பறிமுதல்செய்யப்பட்ட பொருள்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
- பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் 12 லட்சத்து 65 ரூபாயும், 330 மதுபான பாட்டில்களும் பறிமுதல்
- லால்குடியில் 1,412 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
- தென்காசியில் ஆறு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
- ராணிப்பேட்டையில் 91 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
- மானாமதுரையில் மூன்று லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
- காஞ்சிபுரத்தில் பணம், வாக்காளர்களின் பெயர் பட்டியலுடன் சுற்றிய நால்வர் கைது
- சங்கராபுரத்தில் பரப்புரைக்கு அனுமதி வாங்காமல், துண்டுப் பிரதிகளைக் கொண்ட வாகனம் பறிமுதல்
- திருச்சியில் மூன்று லட்சத்து ஏழாயிரம் ரூபாய் பறிமுதல்
- கொளத்தூரில் 85 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
- சிவகாசியில் 45 லட்சம் ரூபாய் பறிமுதல்
- தூத்துக்குடியில் 312 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
- விருத்தாசலத்தில் 13 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
- கள்ளக்குறிச்சியில் 7600 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
- எடப்பாடியில் 992 புடவைகள் பறிமுதல்
- பாளையங்கோட்டையில் 12 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
- மேட்டூரில் 8000 மஃப்லர்களும், இரண்டு லட்சம் ரூபாயும் பறிமுதல்
- செய்யூரில் 2,051 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
- சென்னை சைதாப்பேட்டையில் 1.3 கோடி ரூபாய் பறிமுதல்
- கடலூர் குறிஞ்சிப்பாடியில் 11 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
- கோயம்புத்தூரில் 98 லட்சம் ரூபாய் பறிமுதல்
- வேலூரில் ஒரு கோடியே ஆறு லட்சம் ரூபாய் பறிமுதல்
- சேலம் வீரபாண்டியில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பறிமுதல்
- சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஒரு கோடியே 23 லட்சம் ரூபாய் பறிமுதல்
இதையும் படிங்க: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கமல் மீது வழக்குப்பதிவு