ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க ஏற்பாடு! - tn election commission

மாற்றுத்திறனாளிகள் விரும்பினால் தபால் மூலம் வாக்களிக்கலாம் எனத் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

tn election commission arranged postal vote for physically challenged
மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க ஏற்பாடு!
author img

By

Published : Feb 2, 2021, 5:21 PM IST

சென்னை: எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில், சமூக நலத்துறை, பொதுத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநில தலைமைத் தேர்தல் அலுவலர், “சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் விரும்பினால் தபால் மூலம் வாக்களிக்கலாம்” என்று தெரிவித்தார். மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்கு போட விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான 90 விழுக்காடு வாக்கு இயந்திரங்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இன்னும் 5 நாள்களில் மீதமுள்ள இயந்திரங்கள் தமிழ்நாட்டிற்கு வரவிருப்பதாக கூறினார்.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு நடைபெறும் பரப்புரை செலவுகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்றும் இதுதொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்காலம் என இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்காளர்களுக்காக விழிப்புணர்வு காணொலியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.