ETV Bharat / state

கரோனா பேரிடரிலும் ஆவின் விற்பனை விலை உயர்வு சர்வாதிகார போக்காகும்- பால் முகவர்கள் சங்கம் கண்டனம் - மாநில பால் முகவர்கள் சங்கம்

சென்னை: கரோனா பேரிடர் காலக்கட்டத்தில் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆவின் விற்பனை விலை உயர்வு சர்வாதிகாரத் தனத்தை காட்டுகிறது என மாநில பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

TN Diary Association condemns Aavin for increasing the price amid lockdown

author img

By

Published : Jul 15, 2020, 12:23 AM IST

இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள வீடியோவில், "கடந்த வாரம் ஆவின் நிறுவனம் சார்பில் ஐந்து வகையான பால் மற்றும் பால் பொருட்களை தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகம் செய்தார்.

அதில் மோர், லஸ்ஸி மற்றும் 90 நாட்கள் கெட்டுப் போகாத பால் ஏற்கனவே வணிக சந்தையில் விற்பனையில் உள்ளதென்றும், அதனை சிறு மாற்றங்களோடு புதிய பொருட்களாக சித்தரிக்கப்படுவதாகவும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

மேலும் ஏற்கனவே கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Premium கொழுப்பு சத்து 6.0% திடசத்து 9.0%) விற்பனையில் இருக்கும் போது தற்போது அதில் வெறும் 0.5%கொழுப்பு சத்தை கூடுதலாக்கி, பாக்கெட் வண்ணத்தை மாற்றி அதற்கு "டீ மேட் பால்" என பெயரிட்டு ஒரு லிட்டருக்கு 9 ரூபாய் கூடுதலாக விலை வைத்து 60 ரூபாய் என நிர்ணயம் செய்திருப்பதையும் கண்டித்து "தனியார் பால் நிறுவனங்களைப் போல் தன்னிச்சையாக செயல்பட ஆவின் திட்டமிடுகிறதோ...?" என்கிற சந்தேகத்தையும் எங்களது சங்கத்தின் சார்பில் வெளிப்படுத்தியிருந்தோம்.

அதன் முதற்கட்டமாக நேற்று (ஜூலை 14) முதல் ஆவின் நெய் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், சமையல் வெண்ணை விற்பனை விலை ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அதிலும் நேற்று முன்தினம் (ஜூலை 13) அதற்கான சுற்றறிக்கை வழங்கி விட்டு நேற்று (ஜூலை 14) முதல் உடனடியாக அதன் விற்பனை விலை உயர்வை நடைமுறைப்படுத்துவது தனியார் பால் நிறுவனங்களை விட சர்வாதிகாரி போல் ஆவின் நிர்வாகம் நடந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது.

இதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஏனெனில் கரோனா பேரிடர் காலமான தற்போது நான்கு மாதங்களாக அமுலில் உள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு, வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு முடிவெடுக்க சர்வாதிகார எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே சாத்தியப்படும்.

இந்நிலையில் தேனீர் கடைகள், உணவகங்கள் பெயரைச் சொல்லி "டீ மேட் பால்" என அறிமுகம் செய்து அதிலும் லிட்டருக்கு ஒன்பது ரூபாய் உயர்த்தி நிர்ணயம் செய்து ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்க பார்க்கிறது, ஆவின் நிர்வாகமும் அதற்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசும்.

எனவே உயர்த்தப்பட்ட நெய் மற்றும் சமையல் வெண்ணை, டீ மேட் பால் போன்றவற்றின் விற்பனை விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.