சென்னை: சென்னையை பொறுத்தவரையில் இணை ஆணையர் வெல்ஃபேர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைத்து அதில் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் வாட்ஸ் ஆப் (whatsapp) குரூப்பில் இணைக்க வேண்டும். அதன்பின் துணை ஆணையர்கள் தலைமையில் வாட்ஸ் ஆப் குரூப் அமைத்து அதில் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும்.
உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் முதல் கடைசி காவலர்கள் வரை இருக்க வேண்டும். மற்ற நகரங்களை பொருத்தவரையில் துணை ஆணையர் தலைமையில் வாட்ஸ்ஆப் குரூப் அமைக்கப்பட்டு உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும்.
மாவட்ட அளவில் ஏடிஎஸ்பி (ADSP) தலைமையில் வாட்ஸ்ஆப் குரூப் அமைக்கப்பட்டு அதில் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்கள் வாட்ஸ்ஆப் குரூப்பில் இருக்க வேண்டும். மற்ற நகரங்களிலும் மற்றும் மாவட்டங்களிலும் ஆய்வாளர்கள் தலைமையில் வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் கீழ் கடைசி காவலர்கள் வரை இணைக்கப்பட வேண்டும்.
இவ்வாறாக அமைக்கப்படும் வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்து காவல்துறை நலன் சார்ந்து பதிவிடப்படும் பதிவுகள் மூலமாக உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ்அப் குரூப்க்கு பதிவுகள் அனுப்பப்பட வேண்டும். தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடப்படும் காவலர் நலன் சார்ந்த பதிவுகள் உடனடியாக 30 நிமிடத்தில் அடுத்தடுத்த வாட்ஸ்ஆப் குரூப்பில் அனுப்பப்பட வேண்டும்.
அதுவும் 4 மணி நேரத்திற்குள் அனைத்து காவலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ்ஆப் குரூப்களில் அது சென்றடைய வேண்டும். குறிப்பாக காவலர் நலன் சார்ந்த இந்த வாட்ஸ் ஆப்பில் துறை ரீதியான பதிவுகளை தவிர மற்ற பதிவுகளை பதிவிடக் கூடாது.
இதையும் படிங்க: "செல்லும் இடமெல்லாம் கேப்டனின் உடல் நலம் குறித்து கேள்வி" - பிரேமலதா விஜயகாந்த்!