தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று (மே.11) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 29,272 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 19,182 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 298 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 7,466 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா காரணமாக அரசுப் பள்ளி பக்கம் கவனம் செலுத்தும் பெற்றோர்கள்!