கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில், "தமிழ்நாட்டில் பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டு 68 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவை மூலம் 11 ஆயிரத்து 835 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 17 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,230 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 5,608 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 450 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 407 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,731 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 55 வயதான ஆண் நோயாளி ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் 72 வயது முதியவர், 68 வயது முதியவர் ஆகியோரும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 33 வயது இளைஞர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 75 வயது முதியவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவர் என ஏழு பேர் இன்று உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 118ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று (மே 24) 10,582 என இருந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை இன்று 549 பேருக்கு ஏற்பட்டு 11, 131ஆக உயர்ந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களுக்கு அதிக அளவில் நோய்த் தொற்று இருக்கிறது.
மேலும் 12 வயதிற்கு உள்பட்ட 1,044 குழந்தைகள், 60 வயதிற்குட்பட்ட 1,451 முதியவர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண அறிகுறிகளுடன் 88 விழுக்காடு நோயாளிகளும், அறிகுறிகளுடன் 12 விழுக்காடு நோயாளிகளும் உள்ளனர். அறிகுறிகளுடன் இருப்பவர்களில் 40 விழுக்காடு நோயாளிகளுக்கு காய்ச்சல், இருமல் 37 விழுக்காட்டினருக்கும், தொண்டை வலி 10 விழுக்காட்டினருக்கும், மூச்சுத் திணறல் 9 விழுக்காட்டினருக்கும் சளி ஒழுகுதல் 4 விழுக்காட்டினருக்கு அறிகுறியாக உள்ளன.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களில் 84 விழுக்காட்டினர் வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். 16 விழுக்காட்டினர் கரோனா வைரஸ் நோயினால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 46.5 விழுக்காட்டினரும், 41 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் 46.5 விழுக்காட்டினரும், 21 முதல் 40 வயதிற்குட்பட்ட 8 விழுக்காட்டினர் இறக்கின்றனர். இவர்களில் ஆண்கள் 69 விழுக்காட்டினரும், பெண்கள் 31 விழுக்காட்டினரும்" உள்ளனர்.
மாவட்டம் வாரியாக பாதிப்பு
- சென்னை -11,131
- செங்கல்பட்டு -832
- திருவள்ளூர் -764
- கடலூர் -427
- அரியலூர் -355
- விழுப்புரம் -322
- காஞ்சிபுரம் -304
- திருநெல்வேலி -292
- மதுரை -224
- திருவண்ணாமலை -229
- தூத்துக்குடி -177
- கோயம்புத்தூர் -146
- கள்ளக்குறிச்சி -146
- பெரம்பலூர் -139
- திண்டுக்கல் -133
- விருதுநகர் -115
- திருப்பூர் -112
- தேனி -108
- ராணிப்பேட்டை -95
- தஞ்சாவூர் -84
- தென்காசி -83
- கரூர் -80
- நாமக்கல் -76
- திருச்சிராப்பள்ளி -76
- ஈரோடு -71
- ராமநாதபுரம் -63
- சேலம் -58
- கன்னியாகுமரி -54
- நாகப்பட்டினம் -51
- வேலூர் -38
- திருவாரூர் -38
- திருப்பத்தூர் -30
- சிவகங்கை -29
- கிருஷ்ணகிரி -23
- புதுக்கோட்டை -20
- நீலகிரி -13
- தருமபுரி -6
விமான நிலையத்தின் தனிமைப்படுத்தும் மையங்களில் 81 பேருக்கும், ரயில்கள் மூலம் வந்த 35 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.