இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டிலுள்ள 175 பரிசோதனை மையங்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்த 5 ஆயிரத்து 551 பேருக்கும், பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய 18 பேருக்கும் என மொத்தம் 5569 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 63 லட்சத்து 88 ஆயிரத்து 583 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்தாயிரத்து 556 நபர்கள் குணமடைந்து செப். 19ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 81 ஆயிரத்து 273ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று (செப். 19) ஒரே நாளில் அதிகபட்சமாக 66 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,751ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவிற்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மாவட்ட வாரியாக நேற்றைய பாதிப்பு
- சென்னை - 987
- செங்கல்பட்டு -293
- திருவள்ளூர் - 282
- மதுரை- 68
- காஞ்சிபுரம் - 175
- விருதுநகர் - 55
- தூத்துக்குடி - 65
- திருவண்ணாமலை - 160
- வேலூர் - 146
- திருநெல்வேலி - 108
- தேனி - 55
- ராணிப்பேட்டை -60
- கன்னியாகுமரி - 105
- கோயம்புத்தூர் - 565
- திருச்சிராப்பள்ளி- 103
- கள்ளக்குறிச்சி - 91
- விழுப்புரம் - 144
- சேலம் - 286
- ராமநாதபுரம் - 31
- கடலூர்- 289
- திண்டுக்கல் - 73
- தஞ்சாவூர் - 151
- சிவகங்கை - 37
- தென்காசி - 65
- புதுக்கோட்டை - 90
- திருவாரூர் - 100
- திருப்பத்தூர் - 86
- அரியலூர் - 38
- கிருஷ்ணகிரி -74
- திருப்பூர் -163
- தருமபுரி - 112
- நீலகிரி - 87
- ஈரோடு - 166
- நாகப்பட்டினம் -54
- நாமக்கல் -98
- கரூர் -68
- பெரம்பலூர் -26
இதையும் படிங்க...ஊரடங்கு காலத்தில் சிறப்பு ரயிலில் பயணித்தவர்களில் 97 பேர் உயிரிழப்பு!